தலைவாழை: நவராத்திரி நல்விருந்து - சோள கீர்

படங்கள்: பு.க.பிரவீன்
படங்கள்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சுதா செல்வகுமார்
தொகுப்பு: ப்ரதிமா

சோள கீர்

என்னென்ன தேவை?

இனிப்புச் சோளம் (சுவீட் கார்ன்), மில்க் மெய்ட் – தலா 1 கப்
பால் – 2 கப்
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
உடைத்த முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – சிறிதளவு
ஊறிய பாதாம் பிசின் – கால் கப்
பாதாம் விழுது - 2 டேபிள் ஸ்பூன்
பூசணி விதை – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பாலைக் கொதிக்கவைத்து, சோளத்தை அதில் போட்டு வேகவையுங்கள். குறைவான தணலில் வையுங்கள். சோளம் நன்றாக வெந்ததும் பாதாம் விழுதைச் (பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி அரைத்தது) சேர்த்துக் கிளறுங்கள். மில்க் மெய்ட், பாதாம் பிசின் இரண்டையும் அதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஜாதிக்காய் பொடியைச் சேருங்கள். முந்திரி, பூசணி விதையை நெய்யில் போட்டு பொன்னிறமாக வறுத்துச் சேர்த்துப் பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in