

தொகுப்பு : ப்ரதிமா
என்னென்ன தேவை?
சின்ன கத்தரிக்காய் – 5
எண்ணெய் – தேவைக்கு
அரிந்த மல்லித்தழை – 4 டேபிள் ஸ்பூன்
கலோஞ்சி மசாலா செய்யத் தேவையானவை
தனியா – 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
வெந்தயம், கடுகு – 1 டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவைக்கு
ஆம்சூர் பவுடர் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள், கலோஞ்சி (கருஞ்சீரகம்) – 1 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாய், தனியா, சோம்பு, சீரகம், வெந்தயம், ஓமம், கடுகு, கலோஞ்சி ஆகியவற்றைத் தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். பொருட்கள் சூடு ஆறியதும் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் தூள், ஆம்சூர் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து லேசாக வதக்கி இறக்கிவிடுங்கள். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கத்தரிக்காய்களை நான்காகக் கீறி வதக்குங்கள். கத்திரிக்காய் பாதி வெந்ததும் வதக்கிய மசாலா கலவையை ஒவ்வொரு காயினுள்ளும் திணித்து வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்குங்கள். காய் நன்றாக வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கிவிடுங்கள்.