தலைவாழை: சாவல் கீர்

தலைவாழை: சாவல் கீர்
Updated on
1 min read

தொகுப்பு : ப்ரதிமா

சாவல் கீர்

என்னென்ன தேவை?

பச்சரிசி – கால் கப்
பால் – 3 கப்
சர்க்கரை – அரை கப்
மில்க்மெய்டு – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
திராட்சை – 10
பாதாம், முந்திரி (மெலிதாக சீவியது)
– 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2

எப்படிச் செய்வது?

பச்சரிசியைக் கழுவி நீரை வடிகட்டி வெறும் வாணலியில் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு உடைத்துக்கொள்ளுங்கள். பிறகு அடி கனமான பாத்திரத்தில் மூன்று கப் பால், ஒரு கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடுங்கள். அதனுடன் பொடித்துவைத்துள்ள அரிசியைச் சேர்த்து வேகவிடுங்கள். அரிசி வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்கவிட்டுத் தேங்காய் துருவல், ஏலக்காய்ப் பொடி, மில்க்மெய்டு ஆகியவற்றைச் சேர்த்து இறக்கிவிடுங்கள். பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றைத் தூவிப் பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in