

என்னென்ன தேவை?
கெட்டி அவல் – 1 கப்
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்
மெலிதாகக் கீறிய தேங்காய், வேர்க்கடலை – தலா 4 டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் – தலா 2 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் அவலைப் போட்டு வறுத்துத் தனியே வையுங்கள். அதே வாணலியில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், முந்திரி ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தேங்காய்க் கீற்றைப் போட்டு வதக்குங்கள். அதில் மிளகாய்த் தூளைச் சேர்த்து, வறுத்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தையும் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைத்துவிட்டு உலர் திராட்சையைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.
கொழுக்கட்டை மாவு செய்யும் முறைஅரை கிலோ பச்சரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டுங்கள். அரிசியைப் பருத்தித் துணியில் உலர்த்துங்கள். உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துச் சலித்தால் கொழுக்கட்டை மாவு தயார்.