செய்திப்பிரிவு

Published : 01 Sep 2019 11:53 am

Updated : : 01 Sep 2019 11:53 am

 

விநாயகர் சதுர்த்தி படையல்: நட்ஸ் அப்பம்

nuts-appam

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – கால் கப்
ரவை – கால் கப்
மெலிதாகச் சீவிய பாதாம், முந்திரி – கால் கப்
ஏலப்பொடி – கால் டீஸ்பூன்
துருவிய வெல்லம் – 1 கப்
தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ரவையில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவையுங்கள். நன்றாக ஊறியதும் அதில் கோதுமை மாவு, மைதா மாவு, பாதாம், முந்திரி, ஏலப்பொடி, வெல்லம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் காய்ந்ததும் மாவைக் குழிக் கரண்டியில் அள்ளி ஊற்றுங்கள். ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு நன்றாக வேகவைத்து எடுங்கள்.

நட்ஸ் அப்பம்விநாயகர் சதுர்த்தி படையல்:Nuts appam
Popular Articles

You May Like

More From This Category

More From this Author