

தொகுப்பு:ப்ரதிமா
மழைக்காலத்தில் அவ்வளவாகத் தாகம் எடுக்காது. இதனால், பலரும் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்க மாட்டோம். அதனால் வழக்கமான உடலியல் செயல்பாடுகள் பாதிப்படைவதைக்கூட நாம் உணர்வதில்லை. உடலின் நீர்த் தேவையைச் சமாளிக்க நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த லட்சுமி சீனிவாசன். நீர்ச்சத்து அதிகமுள்ள முள்ளங்கியில் பராத்தா, பிரியாணி, வத்தக் குழம்பு உள்ளிட்ட சுவையான உணவு வகைகளைச் செய்யவும் அவர் கற்றுத்தருகிறார்.
ராய்த்தா
என்னென்னத் தேவை?
துருவிய முள்ளங்கி, கேரட் – தலா 1 கப்
தயிர் – 1 கப்
கறுப்பு உப்பு – தேவைக்கு
சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி – சிறிதளவு
எப்படிச் செய்வது?
துருவிய முள்ளங்கி, கேரட், தயிர்,
கறுப்பு உப்பு, சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து பிரியாணி, பிரிஞ்சி ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.