

தொகுப்பு:ப்ரதிமா
ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் தொடங்கிப் பொது இடங்கள் வரை ஏற்றப்படும் மூவண்ணக்கொடியைப் பார்க்கும்போது பலருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு நிறமும் ஒவ்வொன்றைக் குறிக்கும் என்றாலும் மொழி, மதம், இனம் எனப் பல்வேறுபட்ட மக்கள் இந்தியர்கள் என்ற புள்ளியில் ஒன்றிணைவதையும்தான் மூவண்ணம் உணர்த்துகிறது.
அதன் தொடர்ச்சியாக மூவண்ண உணவைச் சமைத்து ருசிப்பது நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். தினசரி உணவையே ஒருமைப்பாட்டுக்கான வழியாக மாற்றும் வகையில் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.
ஐஸ்கிரீம்
என்னென்ன தேவை?
ஆரஞ்சு நிறத்துக்கு
மாம்பழ ஐஸ் கிரீம் விப்பிங் கிரீம்
- அரை கப்
மாம்பழக் கூழ் - ஒரு கப்
மாம்பழ எசென்ஸ் - ஒரு துளி
பாதாம் உடைத்தது
- ஒரு டேபிள் ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்
வெள்ளை நிறத்துக்கு
வெனிலா ஐஸ்கிரீம்
- விப்பிங் கிரீம் - கால் கப்
வெனிலா எசென்ஸ் - சில துளிகள்
முந்திரி உடைத்தது
- 2 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
பச்சை நிறத்துக்கு
கிவிப் பழ ஐஸ்கிரீம்
- விப்பிங் கிரீம் - கால் கப்
கிவிப் பழக் கூழ் - கால் கப்
பச்சை வண்ண பிஸ்தா எசென்ஸ்
- ஒரு துளி
பிஸ்தா சீவியது - ஒரு டேபிள் ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் - கால் கப்
எப்படிச் செய்வது?
வாயகன்ற பாத்திரத்தில் விப்பிங் கிரீமைப் போட்டு எலக்ட்ரிக் பீட்டரால் (Electric beater) அடித்துக்கொள்ளுங்கள். 20 நிமிடமாவது அடித்தால்தான் அதன் அளவு இரு மடங்காகும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க், மாம்பழக் கூழ் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். பிறகு எசென்ஸ், பாதாம் சேர்த்து காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வையுங்கள்.
இதே போல மற்ற இரண்டு நிறங்களுக்கும் செய்து ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வையுங்கள்.
பெரிய கண்ணாடி டம்ளரில் பச்சை வண்ண ஐஸ்கிரீமைப் போட்டு அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீமையும் அதன் மேல் மாம்பழ ஐஸ்கிரீமையும் போட்டுச் சுவையுங்கள்.