தலைவாழை: விதவிதமா விதை உணவு - கலவை விதைப் பொடி

தலைவாழை: விதவிதமா விதை   உணவு - கலவை விதைப் பொடி
Updated on
1 min read

தொகுப்பு: ப்ரதிமா

விதைகள் எல்லாம் விதைக்கத்தான் எனப் பலரும் நினைத்திருப்போம். சிலர் பூசணி, வெள்ளரி போன்ற தேர்ந்தெடுத்த சில வகை விதைகளை மட்டும் சமையலில் சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், பல வகை விதைகளில் விதவிதமாகச் சமைத்து ருசிக்கலாம் என்கிறார் சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமார். சில விதை உணவு வகைகளைச் சமைக்கவும் அவர் கற்றுத்தருகிறார்.

கலவை விதைப் பொடி

என்னென்ன தேவை

எள் - 1 டேபிள் ஸ்பூன்
சூரியகாந்தி விதை - 2 டேபிள் ஸ்பூன்
வெள்ளரி விதை, தர்பூசணி விதை - தலா 2 டேபிள்  டீஸ்பூன்
சியா விதை - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு, உளுந்து - தலா 2 டேபிள் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
ஆளி விதை - 3 டேபிள் ஸ்பூன்
பூசணி விதை - 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவைக்கு

எப்படிச் செய்வது?

விதைகள், பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுப்  பொன்னிறமாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சூடு ஆறியதும் அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து இட்லிப் பொடியைப் போல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை இட்லி, தோசை, அடை ஆகியவற்றுக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in