

என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு - தலா முக்கால் கப்
கடலைப் பருப்பு, உளுந்து - தலா கால் கப்
பச்சரிசி - 2 கப்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை நன்றாக ஊறவைக்கவும். பச்சரிசியைத் தனியாக ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய், உப்பு இரண்டையும் முதலில் அரைக்கவும். ஊறிய பச்சரிசியை அதனுடன் சேர்த்துக் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். பருப்பு வகைகளைக் கரகரப்பாக அரைத்து, அரைத்த அரிசி மாவுடன் கலக்கவும்.
இந்த மாவு கலவையுடன் தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவைத் தோசைக் கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் வேகவிட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.