

என்னென்ன தேவை?
முளைகட்டிய பயறு 1 கப்
வெல்லம் (துருவியது) அரை கப்
அரிசி மாவு 1 டீஸ்பூன்
ஏலக்காய் சிறிதளவு
நெய் தேவையான அளவு
தேங்காய் அரை மூடி
எப்படிச் செய்வது?
முளைகட்டிய பச்சைப் பயறைத் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். அதில் வெல்லம், அரிசி மாவு, ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை வாழையிலையில் வட்டமாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். செய்வதற்கு எளிமையானது. சத்து நிறைந்தது.
ராஜபுஷ்பம்