

பீட்ரூட்டைப் பார்த்தாலே பலரும் பதறி ஓடுவார்கள். சமைத்த பிறகும் அதில் மீதமிருக்கும் இனிப்புச் சுவையும் இந்த வெறுப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் சமைக்கிற விதத்தில் சமைத்தால் பீட்ரூட்டை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிறார் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மேகலா. அவர் கற்றுத் தரும் பீட்ரூட் உணவு வகைகளைத் தினம் ஒன்றாகச் சமைத்து ருசிக்கலாமா?
பீட்ரூட் பானம்
என்னென்ன தேவை?
துருவிய பீட்ரூட் - 1கப்
காய்ச்சிய பால் - 2 கப்
பேரிச்சம் பழம் - 4
பாதாம் - 4
தேன் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்துடன் துருவிய பீட்ரூட், காய்ச்சிய பால், பாதாம், அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, அதனுடன் தேவையான அளவு தேனைச் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறவும்.
மேகலா