

பீட்ரூட் மாங்காய் ஜூஸ்
என்னென்ன தேவை?
கிளி மூக்கு மாங்காய், பீட்ரூட் - தலா 1
பொடித்த கருப்பட்டி - முக்கால் கப்
புதினா இலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
மாங்காய், பீட்ரூட் இரண்டையும் தோல்சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். ஆறியதும் கூழாக அரைக்கவும். கருப்பட்டியைச் சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டவும். மாங்காய், பீட்ரூட் கூழ் மற்றும் கருப்பட்டியை நன்கு கலக்கவும். ஃபிரிட்ஜில் வைத்து, மேலே புதினா இலை தூவி ஜில்லென்று பரிமாறவும்.