

நெல்லி - இஞ்சி ஜாம்
என்னென்ன தேவை?
நெல்லிக்காய் - 10
இஞ்சி - சிறு துண்டு
பொடித்த வெல்லம் - முக்கால் கப்
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயைக் கொட்டை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயை குக்கரில் வேகவைத்து, ஆறியதும் கூழாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். பிறகு வெல்லத்தைக் கெட்டியாகும்வரை கொதிக்கவிட்டு அதில் நெல்லிக்காய்-இஞ்சி விழுதைச் சேர்த்து சுருளக் கிளறவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும். வாணலியில் ஒட்டாத பதம் வந்து, கெட்டியானதும் இறக்கிவிடவும். ஆறியதும் உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சப்பாத்தி, பிரெட், தோசை, அடைக்குத் தொட்டுக்கொள்ள அருமையான சைடு டிஷ் இது. புளிப்பு, காரம், இனிப்பு கலந்த இந்த ஜாம், அனைவருக்கும் பிடிக்கும். இது நெல்லிக்காய் சீஸன் என்பதால் நிறைய செய்து சுவைக்கலாம்.