முளை கட்டிய கொள்ளு சாம்பார்

முளை கட்டிய கொள்ளு சாம்பார்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

முளைகட்டிய கொள்ளு - கால் கிலோ

சின்ன வெங்காயம் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 4

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகம் - கால் டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - 1 கப்

தக்காளி, உருளைக் கிழங்கு - தலா 2

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

புளிக் கரைசல், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முளைகட்டிய கொள்ளுப் பயிரை மிதமான சூட்டில் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், தனியாத் தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் இவற்றை எண்ணெயில் நன்றாக வதக்கவும்.

ஆறியதும் ஒரு கையளவு கொள்ளு சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு கத்தரிக்காய், உருளைக் கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.

அரைவேக்காடு வெந்ததும் அரைத்த மசாலா, வேகவைத்த கொள்ளு, புளிக் கரைசல், உப்பு இவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். கம கம மணத்துடன் இருக்கும் இந்த முளைகட்டிய கொள்ளு சாம்பார், அனைவருக்கும் பிடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in