

வெஜ் சுப்ரீம் சாலட்
என்னென்ன தேவை?
ஒன்பது வகை காய்கறிகள் - 1 கப்
சாலட் எண்ணெய் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
சாட் மசாலா, ஆம்சூர் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், வெள்ளரி, முள்ளங்கி உட்பட ஒன்பது வகை காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அதில் உப்பு, சாட் மசாலா, ஆம்சூர் தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.