

நெல்லிக்காய் ஊறுகாய்
என்னென்ன தேவை?
நெல்லிக்காய் - 20
தனி மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
நெல்லிக்காயை குக்கரில் போட்டு 2 விசில் வரும்வரை வேகவிடவும். பிறகு கொட்டையை நீக்கிவிட்டு, நெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி வைக்கவும்.
நெல்லிக்காய்களை வெந்நீரில் போட்டு அதில் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து கடுகு தாளித்து நீர் நெல்லியாகவும் உபயோகிக்கலாம். இதை வெடிபழம் என்றும் சொல்வார்கள்.