வெள்ளரி மோர் கூட்டான்

வெள்ளரி மோர் கூட்டான்
Updated on
1 min read

வெள்ளரி மோர் கூட்டான்

என்னென்ன தேவை?

தோல் சீவி நறுக்கிய வெள்ளரி - கால் கிலோ

மஞ்சள் பொடி - 1 சிட்டிகை

புளித்த தயிர் - 1 கப்

எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்க

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு அரைக்க

தேங்காய்த் துருவல் - அரை மூடி

பச்சை மிளகாய் - 2

எப்படிச் செய்வது?

தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து, மிக்ஸியில் அடிக்கவும். வெள்ளரிக்காயைச் சிறிது உப்பு சேர்த்து வேகவிட்டு, தண்ணீரை வடிக்கவும். அதனுடன் தயிர் கலவை, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் வைக்கவும். லேசாக நுரைத்து வரும்போது இறக்கிவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in