

முப்பருப்பு வடை
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
உளுந்து - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு சீரகம், பெருங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி இவற்றைச் சேர்த்து, நீர்விடாமல் கெட்டியாக ஒன்றிரண்டாக அரைக்கவும். கறிவேப்பிலை சேர்த்துப் பிசைந்து, சூடான எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு மிதமான சூட்டில் வேகவிட்டு எடுக்கவும். பண்டிகை நாட்களில் சிலர் வெங்காயத்தைத் தவிர்த்துவிடுவார்கள். வேண்டுமானால் நறுக்கிய புதினா, துருவிய கேரட், கோஸ் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து வடை செய்யலாம்.