

வெனிலா ஐஸ்கிரீம்
என்னென்ன தேவை?
பால் - ஒன்றரை லிட்டர்
சர்க்கரை - 300 - 400 கிராம்
ஜெலட்டின் - ஒன்றரை டீஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
ப்ரெஷ் கிரீம் - 100 கிராம்
வெனிலா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாலைக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, இறக்கவும். ஜெலட்டினைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் கொதிக்க விட்டு, ஆறிய பாலில் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு சோள மாவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். ஆறியதும் எசென்ஸ், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதை ஃப்ரீசரில் வைத்து, செட் ஆனதும் எடுக்கவும். பரிமாறும் போது முந்திரி, பாதாம் ஆகியவற்றை நறுக்கிச் சேர்க்கலாம்.
படங்கள்: எல். சீனிவாசன்