

உளுந்து பூசணி வடாம்
என்னென்ன தேவை?
வெள்ளைப் பூசணி - 1 துண்டு
மிளகாய் வற்றல் - 10
உளுந்து - 1 கப்
துவரம் பருப்பு அல்லது காராமணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூசணியை விதைகளை நீக்கி, தோல் சீவி துண்டுகளாக்கவும். பருப்பு வகைகளை ஊறவைத்து அவற்றுடன் பூசணித் துண்டுகள், உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த விழுதை மெல்லிய துணியில் பகோடாபோல் கிள்ளிவைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் எடுக்கவும். குருமா, வற்றல் குழம்பு, கூட்டு, கீரை மசியல், முதலியவற்றுக்கு இதைப் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.