

மாம்பழ ஜூஸ்
என்னென்ன தேவை?
மாம்பழக் கூழ் - 1லிட்டர்
சர்க்கரை - ஒன்றரை மடங்கு
தண்ணீர் -முக்கால் லிட்டர்
சிட்ரிக் அமிலம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் கலர், கேசரி கலர் - சிறிதளவு
மாம்பழ எசென்ஸ் - 2 டீஸ்பூன்
கே.எம்.எஸ் (பொட்டாசியம் மெட்டாபை சல்பேட்) - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
நன்கு கனிந்த மாம்பழத்தைத் தோல் நீக்கி, கூழ் எடுக்கவும். அதனுடன் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் சிட்ரிக் அமிலம் சேர்த்து இறக்கவும். பழக் கூழ் நன்றாக ஆறியதும் ஃபுட் கலர், எசென்ஸ், கே.எம்.எஸ் (சிறிதளவு தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்) ஆகியவற்றைச் சேர்க்கவும். இதை 3-4 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். கால் பங்கு ஜூஸுடன் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.