

பாகற்காய் தயிர் பச்சடி
என்னென்ன தேவை?
பாகற்காய் - 1
தக்காளிப்பழம் - 1 (சிறியது)
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 1 (சிறியது)
உப்பு - தேவையான அளவு
கெட்டித்தயிர் - 2 கப்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
எப்படிச் செய்வது?
பாகற்காயை விதை நீக்கி மெல்லிதாக நறுக்கவும். உப்பு, மிளகாய் தூள், அரிசி மாவு தூவி பாகற்காயைப் பிசிறி ஊறவைக்கவும். அரை மணிநேரம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசிறிய பாகற்காயைப் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். மொறுமொறுவென்று ஆனதும் தனியாக எடுத்துவைக்கவும்.
தக்காளிப்பழம், உப்பு, தேங்காய் துருவல், பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரைத்த விழுதில் கெட்டித் தயிர் சேர்த்து கலக்கவும். வதக்கிய பாகற்காயை சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும். வெண்டைக்காய் பச்சடி போல சுவையாக இருக்கும்.
என்.உஷா