Published : 16 Mar 2015 04:37 PM
Last Updated : 16 Mar 2015 04:37 PM

குறிப்புகள் பலவிதம்

# சூடு தணிக்கும் பூசணி ஜூஸ் நூல்கோலைத் துருவி அத்துடன் எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள் தூவி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

# திராட்சை சாறுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து தினமும் அருந்தி வர வயிற்றுப்புண், வாய்ப்புண், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

# சிறுகீரையைப் பாசிப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டுவர சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மட்டுப்படும்.

# வெள்ளைப் பூசணிக்காயைத் தோல் சீவி, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதனுடன் புதினா இலைகளைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்துப் பருகினால் உடல் சூடு தணியும்.

- செ. கலைவாணி, மேட்டூர் அணை.

# வெயில் காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்துவிடும். புளித்த மாவை வீணாக்காமல் அதில் விதவிதமான டிபன் வகைகளைச் செய்யலாம்.

# புளித்த மாவுடன் சிறிது ஜவ்வரிசியை ஊறவைக்கவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கிளறவும். இந்த மாவைக் குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.

# புளித்த இட்லி மாவுடன் கடலை மாவு, மிளகாய்த் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பிசையவும். இந்த மாவைச் சிறு சிறு போண்டாவாகக் கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

- சுகந்தினி பாலாஜி, சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x