

கீன்வா
என்னென்ன தேவை?
கீன்வா - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். குக்கரில் கீன்வாவைப் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து, நான்கு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வேகவைத்த கீன்வாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும் . நம் நாடு சிறுதானியங்கள் போலவே இதுவும் சிறந்த சத்துணவு. இந்த கீன்வா தென் அமெரிக்காவின் முக்கிய உணவு.