தவா டிலைட்

தவா டிலைட்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - கால் கிலோ

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

ஆம்சூர் பொடி - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

இஞ்சி - பூண்டு விழுதுடன் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், மிளகாய்த் தூள், ஆம்சூர் பொடி இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விட்டு விழுது போல் பிசையவும். கத்தரிக்காயை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கவும். தயாரித்து வைத்திருக்கும் விழுதைக் கத்தரிக்காய்த் துண்டுகளின் மீது தடவி, சூடான தவாவில் போடவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு இரு புறமும் நன்கு வெந்து சிவந்தவுடன் எடுக்கவும். வெங்காயத் தாள் அல்லது நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி, மாலை நேரத் தேநீருடன் பரிமாறவும்.

லக்ஷ்மி சீனிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in