

புடலை ராய்தா
என்னென்ன தேவை?
பிஞ்சுப் புடலங்காய் - 1
கெட்டித் தயிர் - 2 கப்
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய்த் துருவல் - அரை கப்
எப்படிச் செய்வது?
புடலங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து, நன்கு அரைத்து தயிரில் கலக்கவும். அத்துடன் புடலங்காயைச் சேர்த்துக் கலக்கி கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும். சுவையான புடலங்காய் ராய்தா தயார். இது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும்.
வரலஷ்மி முத்துசாமி