கேழ்வரகு இனிப்பு தோசை
உணவே மருந்து என்று சொல்வார்கள். வாய்க்கு ருசியாக இருக்கும் உணவு வகைகள் எல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று சொல்ல முடியாது. நாவுக்கு ருசியாகவும் அதேவேளையில் வயிற்றுக்கும் இனிய உணவு வகைகளைச் செய்து தரக் கற்றுத் தருகிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலஷ்மி முத்துசாமி.
கேழ்வரகு இனிப்பு தோசை
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு 1 கப்
அரிசி மாவு 1 கப்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
இந்து உப்பு- தேவையான அளவு
வெல்லம் தூளாக்கியது 1 ½ கப்
எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவு, அரிசி மாவு, வெல்லம், உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து ½ மணி நேரம் ஊறவிடவும். தோசைக்கல் சூடானதும் மாவைத் தோசையாக வார்த்துச் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். இதற்கு அசத்தலான காம்பினேஷன் தக்காளி சட்னிதான். இரும்புச் சத்து நிறைந்தது.
வரலஷ்மி முத்துசாமி
