ருசியான ராய்த்தா

ருசியான ராய்த்தா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

பெரிய கத்தரிக்காய் - 1

தயிர் - அரை கப்

மிளகாய்த் தூள், சர்க்கரை - தலா 1 சிட்டிகை

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 கைப்பிடி

எண்ணெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

கத்தரிக்காயை ஆங்காங்கே கத்தியால் கீறிவிடவும். கத்தரிக்காயின் மேல் லேசாக எண்ணெய் தடவி, தோல் கருகும் வரை தீயில் சுட்டெடுக்கவும். ஆறியதும் தோல் நீக்கி, நன்கு மசிக்கவும். கடைந்த தயிரில் உப்பு, சர்க்கரை சேர்க்கவும். மசித்து வைத்திருக்கும் கத்தரிக்காயை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் தாளித்துச் சேர்க்கவும். பரிமாறும் போது மல்லித்தழை, மிளகாய்த் தூள் தூவிப் பரிமாறவும்.

லக்ஷ்மி சீனிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in