பாகற்காய் பிட்லை
பாகற்காய் பிட்லை
என்னென்ன தேவை?
பாகற்காய் - 2 (பெரிது)
தேங்காய் துருவல் - 1 கப்
மிளகாய் வற்றல் - 8
துவரம் பருப்பு - 2 கப்
தனியா - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தேவையானால், வேகவைத்த கொண்டைக்கடலை சேர்க்கலாம்.
எப்படிச் செய்வது?
பாகற்காயை விதை நீக்கி சிறு வளையங்களாக நறுக்கி கொள்ளவும். பிறகு, தயிர் பிசைந்து ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து நன்கு அலசி வேகவைத்து எடுக்கவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி தனியா, கடலைப் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலை தனியாக வறுத்துக்கொள்ளவும். பிறகு, இவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.
புளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்ததும் வேகவைத்த பாகற்காய், அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும். துவரம் பருப்பை குக்கரில் வேக வைக்கவும். துவரம் பருப்பை நன்கு மசித்து கொதிக்கும் புளித் தண்ணீரில் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி, வெல்லத்தூள் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் தாளித்து கொட்டவும். பாகற்காய் பிட்லை தயார்.
என்.உஷா
