

பேபிகார்ன் கிரிஸ்பி
என்னென்ன தேவை?
பேபிகார்ன் - கால் கிலோ
மைதா மாவு, சோள மாவு - தலா 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
புதினா விழுது - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பேபிகார்னை விரல் நீள துண்டுகளாக நறுக்கவும். அதனுடன் மைதா மாவு, சோள மாவு, இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், புதினா விழுது, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசையவும். இதைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் மொறுமொறுப்பு வராது. இதே முறையில் வாழைக்காயிலும் செய்யலாம்.
லட்சுமி சீனிவாசன்