

சம்பா சாதம்
என்னென்ன தேவை?
வெள்ளை உளுத்தம் பருப்பு 1 கப்
மிளகு + சீரகம் தலா 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
கடுகு 1 ஸ்பூன்
தனியா 2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
உதிரியான சாதம் 3 கப்
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தனியா, உளுந்து, மிளகு, சீரகம் மற்றும் தேங்காய்த் துருவலைத் தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு நெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவற்றை மிக்ஸியில் பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்து உதிரியான சாதத்தைக் கொட்டி இந்தப் பொடியைப் போட்டு, உப்பு மற்றும் நெய் சேர்த்துக் கிளறவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சுவை கூட்டத் தேவைப்பட்டால் வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலையைச் சேர்க்கலாம். இது பித்தம் நீக்கிச் சுறுசுறுப்பைத் தரும்.
வரலஷ்மி முத்துசாமி