

அவகாடோ டிப்
என்னென்ன தேவை?
நன்கு பழுத்த அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) - 3
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
நன்கு பழுத்த அவகாடோவை வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை நீக்கவும். உள்ளே இருக்கும் சதைப்பற்றை ஸ்பூனால் வழித்து ஒரு கப்பில் போடவும். பிறகு அதை கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழையைச் சேர்க்கவும். சிப்ஸ் வகைகளை இதில் டிப் செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நல்ல கொழுப்பின் அளவை நம் ரத்தத்தில் அதிகரிக்க அவகாடோ உதவுகிறது.