

கேரட் கோசுமல்லி
என்னென்ன தேவை?
கேரட் - 4
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - 1
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கேரட்டைச் சீவி உப்பு போட்டு, பச்சை மிளகாய் நறுக்கிப் போடவும். எலுமிச்சம் பழம் பிழிந்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டவும். பிறகு கலக்கிவிட்டு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையைச் சேர்க்கவும். வைட்டமின்கள் நிறைந்த இந்த உணவை அப்படியே சாப்பிடலாம்.
வரலஷ்மி முத்துசாமி