

என்னென்ன தேவை?
பாசிப் பயறு - 1 கப்
தேங்காய்த் துருவல், கேரட் துருவல் - தலா 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாசிப் பயறை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.
8 மணி நேரத்தில் பயறு முளைகட்டிவிடும். முளைகட்டிய பயறுடன் கேரட் துருவல், தேங்காய்த் துருவல், மிளகுத் தூள், உப்பு சேர்த்துக் கிளறிப் பரிமாறலாம்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும் செரிமானத்துக்கும் ஏற்றது.
மாலை சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். பாசிப் பயறுக்குப் பதிலாகக் கொண்டைக் கடலையிலும் இதைச் செய்யலாம்.
இயற்கை ஆர்வலர் மல்லிகேஸ்வரி