

என்னென்ன தேவை?
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தலா 1 கைப்பிடி
வெல்லம் - 50 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
எலுமிச்சை - 1
எப்படிச் செய்வது?
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இவற்றுடன் வெல்லம், இஞ்சி சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும்.
அதில் எலுமிச்சை சாறு பிழிந்து மிக்ஸியில் அரைத்து. வடிகட்டி சாறெடுத்துப் பரிமாறவும்.
ரத்த சுத்திகரிப்புக்கு உகந்தது. கல்லீரல், இதயம் இவற்றுக்கு நல்லது.
சாப்பாட்டில் இவற்றை ஒதுக்கும் குழந்தைகள்கூட, இப்படிச் சாறாகக் கொடுத்தால், ரசித்து ருசிப்பார்கள்.