

என்னென்ன தேவை?
அவல் - 1 கப்
வெல்லம் - சிறிதளவு
உலர் திராட்சை, பேரீச்சை - கால் கப்
எப்படிச் செய்வது?
அவலை நன்றாகக் கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டவும். ஊறிய அவலுடன் வெல்லம், உலர் திராட்சை, பேரீச்சம் பழம் கலந்து பரிமாறலாம்.
பாக்கெட்டில் அடைத்து விற்கும் ஸ்நாக்ஸ் ரகங்களுக்குப் பதிலாக, பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இந்த இனிப்பு அவலைக் கொடுக்கலாம்.
சோள அரிசி அவலைப் பயன்படுத்தினால் தனித்துவ சுவை கிடைக்கும். கைக்குத்தல் ரகம் கிடைத்தால் இன்னும் நல்லது.
இனிப்புக்குப் பதிலாக கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்துத் தேவையான அளவு மிளகுத் தூள், உப்பு இவற்றைத் தூவி கார அவலும் செய்யலாம்.
இயற்கை ஆர்வலர் மல்லிகேஸ்வரி