

என்னென்ன தேவை?
உளுந்து - 75 கிராம்
பச்சரிசி - 400 கிராம்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசி, உளுந்து இரண்டையும் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரைத்து அரை மணி நேரம் புளிக்க விடவும். பிறகு உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவைச் சிறு குழிக் கரண்டியில் அள்ளி ஊற்றவும். நன்றாக வெந்ததும் எடுக்கவும். தீயை அதிகமாக வைத்தால் பணியாரம் கருகிவிடும். அதனால் மிதமான தீயில் வேகவிட்டு, உடனே எடுத்துவிடவும்.
காரைக்குடி அன்னலட்சுமி உணவக உரிமையாளர் லட்சுமி