செட்டிநாட்டு சமையல்: குழிப் பணியாரம்

செட்டிநாட்டு சமையல்: குழிப் பணியாரம்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

உளுந்து - 30 கிராம்

பச்சரிசி - 75 கிராம்

உப்பு - 1 டீஸ்பூன்

இட்லி அரிசி - 75 கிராம்

கேரட் - 1

முட்டைக்கோஸ் - சிறு துண்டு

வெங்காயம் - 3

தேங்காய்த் துருவல் - அரை கப்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அரிசி வகைகள், பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும். ஆறு முதல் ஏழு மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். துருவிய கேரட், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், துருவிய வெங்காயம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இதை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து குழிகளில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

காரைக்குடி அன்னலட்சுமி உணவக உரிமையாளர் லட்சுமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in