செட்டிநாட்டு சமையல்: கவுனி அரிசி

செட்டிநாட்டு சமையல்: கவுனி அரிசி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கவுனி அரிசி - 150 கிராம்

சர்க்கரை - கால் கிலோ

நெய் - 25 கிராம்

தேங்காய்த் துருவல் - 100 கிராம்

ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை

எப்படிச் செய்வது?

கவுனி அரிசியைச் சிறிதளவு தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஊறவைத்த அதே தண்ணீருடன் குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியதும் அரிசியுடன் நெய், சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

காரைக்குடி அன்னலட்சுமி உணவக உரிமையாளர் லட்சுமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in