

என்னென்ன தேவை?
குறுக்கப்பட்ட பால் - 1 டின்
வெண்ணெய் - 120 கிராம்
மைதா - 240 கிராம்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 டீஸ்பூன்
பால் - 200 மிலி
எப்படிச் செய்வது?
குறுக்கப்பட்ட பாலுடன் வெண்ணெயைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். மைதாவுடன் பேக்கிங் பவுடர், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து மூன்று முறை சலிக்கவும். அப்போதுதான் அவை ஒன்றுடன் ஒன்று நன்றாகக் கலக்கும். சலித்த மாவை வெண்ணெய் கலவையுடன் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு எசென்ஸ் சேர்த்து, வெண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றவும். அதன் மேல் பட்டர் பேப்பரை வைக்கவும். இதை மைக்ரோ வேவ் அவனில் பேக் செய்து எடுக்கவும். இந்த கேக்கை எண் 1 வடிவில் வெட்டவும். அதன் மீது ரோஸ் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பைப்பிங் ஐசிங்கைப் பரப்பவும். செர்ரி பழங்களைக் கொண்டு அலங்கரிக்கவும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இந்த கேக் கூடுதல் சுவைகூட்டும்.
லதாமணி ராஜ்குமார்