

அவல் கிரஞ்சி
என்னென்ன தேவை?
வேர்க்கடலை - 1 கப்
வெள்ளை அவல் - 1 கப்
உருளைக் கிழங்கு - 4
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அவலை ஊறவைத்துப் பிழியவும். வேர்க்கடலையை வறுத்து, மாவாகப் பொடிக்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரிக்கவும். அதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வேர்க்கடலை பொடி, ஊறிய அவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
வரலட்சுமி முத்துசாமி