Published : 01 Jul 2019 01:38 PM
Last Updated : 01 Jul 2019 01:38 PM

மட்டன் கீமா வடை

தேவையான பொருட்கள்:

மட்டன் கொத்துக்கறி - கால் கிலோ

பூண்டு - 10 பல்

இஞ்சி - சிறிய துண்டு

தேங்காய் - கால் மூடி

பச்சை மிளகாய் - 3

பட்டை - சிறிய துண்டு

கிராம்பு - 3

பொட்டுக்கடலை - 50 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம் (அல்லது) ஒரு பெரிய வெங்காயம்

தக்காளி - 1

எண்ணெய் - தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

 

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கொத்துக்கறியைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர், நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் அதில் போட்டு, நன்றாகக் கிளறிவிடவும்.

அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி, 2 அல்லது 3 விசில் வரை வேகவிடவும்.

பிரஷ்ஷர் நீங்கியதும், கறியில் தண்ணீர் இருந்தால் வற்றும்வரை அதை அடுப்பிலேயே வைத்துக் கிளறவும். பின்னர், ஆறவிடவும்.

நன்கு ஆறியதும், மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கொஞ்சமாக எண்ணெய் விடவும். இந்தக் கலவையை தேவையான அளவில் வடைபோலத் தட்டி, இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

கறி ஏற்கெனவே நன்றாக வெந்துவிட்டதால், வடையின் மேற்புறம் பொன்னிறமாகும் அளவுக்கு ஒருசில நிமிடங்கள் மட்டும் தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் போதுமானது.

எண்ணெய்க்குப் பதில் நெய் சேர்த்தால், கூடுதல் சுவை மற்றும் வாசனையுடன் இருக்கும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x