Published : 02 Aug 2017 11:14 AM
Last Updated : 02 Aug 2017 11:14 AM

அறுசுவை ஆடி!- உளுந்தோதரை

றுகளில் தண்ணீர் ஓடிய அந்தக் காலத்தில் ஆடிப் பெருக்கைப் பலரும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். கரைபுரண்டோடும் நதியைப் பார்க்கிற மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடும். பொங்கிவரும் புதுப்புனலை மலர் தூவி, அறுசுவை உணவோடு வரவேற்கிற வழக்கம் பல இடங்களில் இருந்திருக்கிறது. இன்று ஆறுகள் வற்றிவிட்டாலும் வழமையை விட முடியாமல் நதிக்கரையோர மக்கள் பதினெட்டாம் பெருக்கைக் கொண்டாடி வருகிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தின்போது வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவை குவிந்துவிடும். இவற்றை வைத்தே விருந்து தயாரிக்கக் கற்றுத்தருகிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன்.

குலாபி பாத்

என்னென்ன தேவை?

வரகரிசி - 1 கப்

பால் - 4 கப்

பொடி கல்கண்டு - 2 கப்

பீட்ரூட் துருவல் - கால் கப்

நெய் - 6 டேபிள் ஸ்பூன்

தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்

பன்னீர் - 1 கரண்டி

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

பாதாம், முந்திரி - சிறிதளவு

எப்படிச் செய்வது?

தேங்காயைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு நெய்யில் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். வரகரிசியைக் களைந்து பால், அரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிடுங்கள். கல்கண்டை மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். வேகவிட்ட கலவையோடு பொடித்த கல்கண்டு, பீட்ரூட் துருவல், ஏலக்காய்த் தூள், பன்னீர், நெய் சேர்த்துக் கிளறி கெட்டியானதும் இறக்கிவைத்துத் தேங்காய்த் துண்டுகளைச் சேர்த்துக் கலக்குங்கள். மேலே பாதாம், முந்திரி தூவி அலங்கரியுங்கள்.

உளுந்தோதரை

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 ஆழாக்கு

உளுந்து - 7 டீஸ்பூன்

கொப்பரைத் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

இனிப்புச் சோள முத்துக்கள் - 1 கரண்டி

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

30CHLRD_RECIPE_2தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து, கடலைப் பருப்பு

- தலா 1 டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 5 டீஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 1

எப்படிச் செய்வது?

அரிசியைக் களைந்து மஞ்சள் பொடி, சோள முத்துக்கள் சேர்த்து உதிரியாக வடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு உளுந்து, கொப்பரைத் துருவல், மிளகாய், வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அவற்றுடன் உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துத் தாளியுங்கள். இதை சாதத்தில் சேர்த்து, தயார் செய்துவைத்துள்ள பொடி,நெய் சேர்த்துக் கலக்குங்கள். அப்பளம், தயிர்ப் பச்சடியோடு பரிமாறுங்கள்.

வாழைப்பழ ராய்தா

என்னென்ன தேவை?

புளிப்பில்லாத கெட்டித்தயிர் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

முந்திரி - 6

உப்பு - தேவையான அளவு

வாழைப்பழம் - 1

எலுமிச்சைச் சாறு - சில துளிகள்

உலர்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்

தேன் (விருப்பமானால்) - 1 டீஸ்பூன்

30CHLRD_RECIPE_5எப்படிச் செய்வது?

தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரைத்துத் தயிரில் கலந்துகொள்ளுங்கள். வாழைப்பழத்தை வட்ட வட்டமாக நறுக்கி நிறம் மாறாமல் இருக்க அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்துவையுங்கள்.

பிறகு இதையும் உலர் திராட்சையையும் தயிரில் சேருங்கள். மேலே தேன் ஊற்றிப் பரிமாறுங்கள்.

மேத்தி பக்கோடா

என்னென்ன தேவை?

பருப்பு - 1 கப்

வெந்தயக் கீரை (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்

மிளகு - 10

தனியா - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

30CHLRD_RECIPE4எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பைக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரையுங்கள். மிளகு, தனியா இரண்டையும் கொரகொரப்பாகப் பொடித்து அதோடு உப்பு சேர்த்து மாவில் கொட்டிக் கலக்குங்கள்.

இந்த மாவைச் சில நிமிடங்களுக்கு நன்றாக அடித்துக் கலக்குங்கள். அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை சேர்த்துக் கலக்குங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கொஞ்சம் சூடான எண்ணெயை இந்த மாவில் விட்டுக் கலக்குங்கள். பிறகு மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

ஆரோக்கிய பீடா

என்னென்ன தேவை?

பெரிய வெற்றிலை - 6

கேரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 1 டீஸ்பூன்

பேரீச்சைத் துண்டுகள் அல்லது உலர் திராட்சை - 1 டீஸ்பூன்

இஞ்சித் துருவல், வறுத்த நிலக்கடலை, ஏலக்காய்ப் பொடி - தலா அரை டீஸ்பூன்

தேன் - 1டேபிள் ஸ்பூன்

சுண்ணாம்பு - சிறிதளவு

கிராம்பு - 6

எப்படிச் செய்வது?

வெற்றிலையைக் கழுவி, காம்பு நீக்கி ஒருபுறம் சுண்ணாம்பு தடவி வையுங்கள். கேரட் துருவல், தேங்காய்த் துருவல், தேன், இஞ்சித் துருவல், நிலக்கடலை,பேரீச்சைத் துண்டுகள் அல்லது உலர் திராட்சை ஆகியவற்றை ஒன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையை ஆறு பங்காகப் பிரியுங்கள். சுண்ணாம்பு தடவிய வெற்றிலையின் உள்புறம் ஒரு பங்கு கலவை வைத்து மூடி, கிராம்பு குத்திவையுங்கள். வெற்றிலை சிறியதாக இருந்தால் ஒரு வெற்றிலையின் உள்ளே கலவை வைத்து இன்னொரு வெற்றிலைக்குள் இதை வைத்து மூடி கிராம்பு குத்தலாம்.

தொகுப்பு - ப்ரதிமா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x