

என்னென்ன தேவை?
கத்திரிக்காய் - கால் கிலோ
முருங்கைக்காய், வாழைக்காய் - தலா 1
கீரைத்தண்டு - 2
மொச்சைக்கொட்டை-150 கிராம்
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளி தலா -1
கருவாடு (வஞ்சிரம் அல்லது கொடுவா) - கால் கிலோ
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கடுகு - அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
முதல் நாள் இரவே மொச்சைப் பயறை ஊற வைக்கவும். காலையில் மொச்சையை வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய காய்களைச் சேர்த்து அவற்றுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடிவைத்து வேகவிடவும். காய் வெந்ததும் வேகவைத்த மொச்சையைச் சேர்க்கவும். பிறகு புளியைக் கரைத்துச் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது கழுவி வைத்துள்ள கருவாட்டுத் துண்டுகளைச் சேர்த்து மூடிவைக்கவும். பத்து நிமிடம் கழித்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.