

கர்ஜுக்காய்
என்னென்ன தேவை?
வேர்க்கடலை - 1 கப்
மைதா - 2 கப்
வெள்ளை எள் - 4 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கவும். எள், தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து இவற்றுடன் சர்க்கரை, வேர்க்கடலை சேர்த்து நைஸாகப் பொடிக்கவும். பொடித்த கலவையுடன் ஏலப்பொடி, நெய் சேர்த்துப் பிசறி வைக்கவும். மைதாவைத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். மாவை வட்டமாகத் தட்டி, பொடியை நடுவில் வைக்கவும். சோமாசி அச்சில் போட்டு வெட்டியெடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வரலட்சுமி முத்துசாமி