

என்னென்ன தேவை?
முருங்கைக் கீரை - 1 கப்
முருங்கைப் பூ - கால் கப்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
அரைக்க
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
வேர்க்கடலை - 2 கைப்பிடியளவு
பொட்டுக்கடலை - 1 கைப்பிடியளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலை இவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இரண்டையும் தண்ணீரில் அலசிக்கொள்ளுங்கள். மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, உப்பு சேர்த்து வதக்கி, வேகவையுங்கள். கீரையிலுள்ள நீரே போதும். தேவையெனில் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். தண்ணீர் வற்றி, கீரை வெந்ததும் அரைத்துவைத்திருக்கும் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் மணக்கும் முருங்கைக் கீரை பொரியல் தயார்.