

என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 1 கப்
முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 10
லவங்கம் - 4
பட்டை - சிறு துண்டு
வெங்காயம், கேரட் - தலா 1
பனீர் - சிறிய துண்டு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வானலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் முந்திரி, பாதம், திராட்சை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுங்கள். அதில் பனீர் துண்டுகளைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். பிறகு கேரட் துண்டுகளைப் போட்டு வதக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மீதமுள்ள வெண்ணெயில் பட்டை, லவங்கம், மிளகு போட்டுப் பொரித்து, ஆறிய பாசுமதி சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளறுங்கள். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறுங்கள். பொரித்து வைத்துள்ளவற்றை அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கிவையுங்கள். தேவைப்பட்டால் சிறிது நெய் விட்டுக் கிளறி கொத்தமல்லி தலை தூவிப் பரிமாறுங்கள்.