

என்னென்ன தேவை?
நேந்திரம் பழம் - 1
மைதா மாவு - 100 கிராம்
சோடா உப்பு - சிறிதளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவுடன் சிறிதளவு உப்பு, சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைக்கவும். நேந்திரம் பழத்தை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மைதா மாவில் முக்கியெடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொரித்தப் பின் அவற்றின் மேல் சர்க்கரையை லேசாகத் தூவி பரிமாறவும்.
சுலைஹா பீவி