

என்னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப்
சேமியா - 100 கிராம்
துருவிய சுரைக்காய் - கால் கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வேகவைத்து அரைத்த கடலைப் பருப்பு - கால் கப்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சேமியாவை வெந்நீரில் போட்டி சில நிமிடங்கள் கழித்து வடிகட்டி, உடனே அதன் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும். கடலை மாவுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். கலவையை சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சுதா செல்வகுமார்