

என்னென்ன தேவை?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 4
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப்
மைதா மாவு - 2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது ?
மைதா மாவில் உப்பைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். வள்ளிக் கிழங்கை வேகவிட்டுத் தோலுரித்து மசியுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, வள்ளிக் கிழங்கு, பட்டாணி, மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டியெடுங்கள். ஆறியதும் மைதாவை வட்டமாகத் தேய்த்து நடுவில் இந்தப் பூரணத்தை வைத்து முக்கோணமாக மடியுங்கள். இவற்றைச் சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
- வரலட்சுமி முத்துசாமி